கடந்த 2007 ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்றோர் சிங்கள மொழிப் பரீட்சையில் தோற்றுவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச சேவையில் உள்ளவர்கள், அவர்களின் தரங்களுக்கேற்ப அரச கரும மொழித் திணைக்களத்தினால் நடத்தப்படும் சிங்கள மொழிப் பரீட்சையில் தோற்றி சித்தியடைவத கட்டாயமாகும்.
ஆனால் 2007 ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்று ஐம்பது வயது பூர்த்தியடையாத அரச ஊழியர்கள் இப்பரீட்சையில் தோற்றி சித்தியடையவேண்டும் என்பது கட்டாயமில்லை.
அதற்கு மாற்றாக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் பாட விதானங்களுக்கமைவாக நடத்தப்படும் 100 மணித்தியால மொழிப் பயிற்சி பாடநெறியில் கலந்துகொள்வது அவசியமானதாகும் என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
dgi