
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16000 பேர் வரை கலந்துகொள்ளவுள்ளனர் என்று இன்று (03) தம்புள்ளயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் கபில தெரணியகல உட்பட இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது அங்கத்தவர்களின் சம்பள பிரச்சினை உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.