இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 2000 ஊழியர்களை இணைப்பதற்கு திரைசேரியின் அனுமதியை கோர போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எதிர்பார்த்துள்ளார் என திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ரயில் பாதை புனர்நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு அவசியமான ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கு திரைசேரி அனுமதியை இதற்கு முன்னரும் எதிர்பார்த்திருந்ததாகவும் அதற்கான சாதகமான பதிலை பொது முகாமையாளர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு ஆராய்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொது முகாமையாளர், திணைக்கள பணிகளுக்கு தற்போது உள்ள ஊழியர் போதாமையினால் புனர்நிர்மாணப்பணிகள் தாமதமடைவதாகவும் அதனால் ரயில் தடம் மாறும் பிரச்சினை நிலவுவதனால் பொது மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கோரி அமைச்சர் அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.