அரச சேவையில் உள்ளவர்களில் 17 சதவீதமானவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்று அரச பணியாளர்கள் குறித்த தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 27.2 வீதமானவர்கள் ஆண்களும் 4.8 வீதமானவர்கள் பெண்களுமாவர்.
பொது நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இராணுவம், பொலிஸ், பெருந்தெருக்கள், நீர்வழங்கல், மின்சாரம் மற்றும் உட்கட்டுமானம் சார்ந்த அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி வரையில் 1,109,,475 பேர் குறித்த திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில் 55.1 வீதமானவர்கள் ஆண்களும் 44.9 வீதமானவர்கள் பெண்களுமாவர்.
தினகரன்/ வேலைத்தளம்