நாளைய தினம் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்காக போதுமானளவு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடுமுழுவதும் சுமார் 5 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொழும்பு – கோட்டை, மருதானை, பம்பலப்பிட்டி மற்றும் தெமட்டகொடை முதலான தொடருந்து நிலையங்களுக்கு அருகில் அதிகளவான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் ஊழியர்கள் தொடருந்துகளில் பயணிப்பதற்கு விண்ணப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.
எனவே, குறித்த தொடருந்து பயணிகள், தங்களின் பணியிடங்களுக்கு செல்வதற்காக தொடருந்து நிலையங்களுக்கு அருகில் போதியளவு பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கமைய, ஊழியர்கள் எந்தவித அளெகரியங்களுமின்றி பணிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு நாளை முதல் ஏற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
மூலம் : Sooriyanfmnews