சப்ரகமுவ மாகாண பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இம்மாதம் 20ஆம் திகதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினரும் மாகாண கல்வி மற்றும் சுகாதார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கேகாலை மாவட்ட கண்காணிப்பாளருமான அண்ணாமலை பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கத் தவறிய பட்டதாரிகளுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில் இறுதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் உயர்தரத்தில் நிலவும் கணித, விஞ்ஞான அழகியல் மற்றும் வர்த்தக பிரிவுகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அனைத்து மாகாணங்களிலுமிருந்து தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி இம்மாதம் 11ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தகுதியுடைய பட்டதாரிகள் விண்ணப்பங்களை அனுப்ப தவறியிருந்தால் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது.
www.sg.gov.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
வாய்ப்புக்களை வழங்குவதில் சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் ஏனைய மாகாண பட்டதாரிகளுக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றபடியினால் தவறாது விண்ணப்பிக்குமாறும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.