அரச – தனியார் துறை நிறுவனங்களுக்கான புதிய அறிவித்தல்

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் செயற்படவேண்டிய முறைமை தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தொடர்பில், அதன் தலைவர்கள் பொறுப்புடையவராக இருக்க வேண்டும்.

பணியாளர்களின் சுகாதார நிலைமை தொடர்பாக அவதானம் செலுத்தி, நோய் அறிகுறிகள் தென்படுமாயின், அவர்களுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அவர்கள் சேவைக்கு சமூமளிப்பதை தவிர்க்கவும்  நடவடிக்கை வேண்டும்.

பணியாற்றும் இடங்களில் உள்ள பிரிவுகளை இயன்றளவு தனித்தனியாக முன்னெடுப்பதுடன், குறித்த பிரிவுகளை சார்ந்தவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதை தவிர்த்து, பணிக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435