84 வயதிலும் உழைத்துவாழும் மூதாட்டி: தன்னம்பிக்கைக்கு ஒரு முன்னுதாரணம்

60 வயது வந்துவிட்டால் தொழிலிருந்து ஓய்வுபெற்று அடுத்துவரும் காலத்தை ஓய்வாக இருந்து பொழுதைப் போக்குவதே பெரும்பாலான தொழிலாளர்களின் வாழ்வின் நடைமுறையாக இருக்கும்.

ஆனால், ஓய்வின் பின்னரும், 84 வயதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று வீடொன்றில் கூலித்தொழில் செய்து தனது வாழ்க்கைக்கான பொருளாதாரத் தேவையை தானே பூர்த்தி செய்து உறவுகளுடன் மகிழ்ச்சியாக ஒரு தொழிலாளி வாழ்கிறாறென்றால் அது வியக்கத்தக்கததாகும்.

அவ்வாறாக தனது வாழ்க்கையை முன்கொண்டு செல்லும் ஒரு மூத்தாட்டியின் கதைதான் இது.

வேலைத்தளம் – வெடபிம இணையத்தளங்களின் தொழிலாளர்களின் வேலைத்தளத்தை நோக்கிய பயணம் இம்முறை மலையத்தின் ஹட்டன் நகரை நோக்கி அமைந்துள்ளது.

தொழிளார்கள் தமது தொழிலிடத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்கள் என்பனவற்றை களத்திலிருந்து நேரடியாக எடுத்துச்சொல்வதே எமது இந்த பயணத்தின் நோக்கமாகும்.

அதில் தன்னம்பிக்கையின் உச்சம்தொட்ட ஒர் தொழிலாயை சந்திக்கும் வாய்ப்பு ஹட்டன் – டன்பார் தோட்டத்தில் எமது வேலைத்தளம் குழுவிற்கு கிடைத்தது.

வீராசாமி ஜனாகி. வயது 84. ஹட்டன் – டன்பார் தோட்டத்தைச் சேர்ந்த இவர், வீட்டு பணியாளராக தொழில் செய்து தனது ஜீவனோபாயத்துக்கு தேவையான பணத்தை தானே உழைத்துக்கொள்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணியாற்;றிய இவர், தனது ஓய்வின் பின்னரும் உழைத்தே வாழ்கிறார்.

வீட்டு பணியாளராக பணிபுரிந்து, நாளாந்தம் 300 ரூபா அளவில் உழைத்து, அந்தப் பணத்தைக்கொண்டு தனது வாழ்க்கைச் செலவையும் பூர்த்திசெய்துகொண்டு, தனது பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

டன்பார் தோட்டத்திலிருந்து தினமும் ஹட்டனுக்கு சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்து சென்று வீடொன்றில் கூலிவேலை செய்து மீண்டும் வீடு நடந்தே வீடு திரும்புகிறார் இந்த மூதாட்டி.

தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து மற்றவரில் தங்கி வாழாமல், அவர்களுக்கு தொந்தரவின்றி, வாழவேண்டும் என்பதே மூதாட்டி வீராசாமி ஜானகியின் எண்ணம்.

84 வயதிலும், உழைத்துவாழும் இந்த மூதாட்டி, தொழிலாளர்களுக்கு ஓர் முன்னுதாரணம். தன்னம்பிக்கையின் உச்சம் என்றும் இவரைக் கூறலாம். பெண்களுக்கும் மட்டுமல்ல, ஆண்டுகளுக்கும்கூட….

இவர் தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து உழைத்து தனது வாழ்க்கையை முன்கொண்டு செல்ல எமது வேலைத்தளம் மற்றும் வெடபிம இணையத்தளங்களின் வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435