அரச திணைக்களங்கள் – கூட்டுத்தாபனங்களுக்கான விசேட சுற்றறிக்கை

மறு அறிவித்தல் வெளியிடப்படும்வரை அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு புதிய நியமனங்களை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியின் செயலாளர், அனைத்து அமைச்சிற்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதமர் – அமைச்சரவை – பொதுநிர்வாக அமைச்சு நிதி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச திணைக்களங்கள் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களில் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிகளில் வெற்றிடங்கள் நிலவினால் அதற்காக அமைச்சின் மேலதிக செயலாளர் தகைமையில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வுபெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலாளர் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435