அரச துறை பிணக்குகளை தீர்க்க குழு- அமைச்சரவை தீர்மானம்

தற்போது சில அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள், வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் துறையில் ஏற்படும் பிணக்குகள் மற்றும் வேலை நிறுத்தங்களைக் குறைப்பதற்காக 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தாலும், அரச துறையில் அவ்வாறான பொறிமுறை இல்லை. ‘சுபீட்சத்தின் நோக்கு’ அரச கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தற்போதுள்ள தனியார் துறையின் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தீர்ப்புச் செயன்முறைக்கு ஒத்ததான செயன்முறையொன்று அரச துறை ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச துறையின் பிணக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் தீர்ப்பதற்குமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்மதங்கள், யோசனைகள், தலையீடுகள், தீர்த்தல் எனும் நான்கு அம்ச மூலோபாயங்களுடன் கூடிய பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏற்புடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435