அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் சேவையை மேலும் செயற்றிறன் மிக்கதாக மாற்றுவதற்கு சேவை இலாப கொள்கையொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தினூடாக வழங்கும் சேவை, தேவையான தகவல், சட்டதிட்டங்கள் , அதற்கு செலவாகும் காலம், திட்டமிடல் மற்றும் ஊழியர்கள் என்று வகைப்படுத்தலுக்கமைய இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.
இக்கொள்கை செயற்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தொடர்ச்சியாக ஆய்வு செய்யவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரச சேவைகள் ஆணைக்குழு, நிறுவப்பட்டு 8 மாதங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் சிறந்த சேவை வழங்குவதில் வெற்றிகண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அரச அதிகாரிகளின் நியமனம், நிரந்தர நியமனம், ஊழியர்களை இணைத்துக்கொள்ளல், இராஜினாமா, ஓய்வுபெறல் என்பவை தொடர்பில் கிடைத்துள்ள 5736 முறைப்பாடுகளில் 5728 முறைப்பாடுகளுக்கான தீர்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் இது வரை கிடைத்த 2429 முறைப்பாடுகளில் 2188 முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற நன்னடத்தை தொடர்பான 776 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பவற்றில் இருந்து தகவல்களை பெற்றுகொள்ளுதல், செயற்றிறனுடன் செயற்படல் என்பவற்றுக்காக மாதிரி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேலைத்தளம்