அரச நிறுவனங்களுக்கு சிற்றூழியர்களை இணைக்கத் தடை

சிற்றூழியர்களை இணைப்பதை இடைநிறுத்துமாறு நிதியமைச்சு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பவற்றில் சிற்றூழியர்களை இணைத்துக்கொள்வதனூடாக தமது ஆதரவாளர்களுக்கு அரசியல்வாதிகள் அரச தொழிலை பெற்றுக்கொடுக்கின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர்., அலுவலக உதவியாளர் மற்றும் காவற்காரர் என்பன சிற்றூழியர்கள் தரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நியமனங்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இடம்பெறுவதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் சிற்றூழியர்களை சேவையில் இணைப்பதற்கு திரைசேரியின் ஆலோசனைப் பெறப்படவேண்டும் என்று என்று நிதியமைச்சு அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகளுக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக திரைசேரியின் பிரதான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு சிற்றூழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கும்பட்சத்தில் திரைசேரிக்கு அறிவிக்கப்படவேண்டும். அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்களை குறைத்து செலவினை குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி உத்தேசிக்கப்பட்டுள்ள முறைக்கமைய, சேவையில் இணைத்தல் மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதனை அவதானிக்க கண்காணிப்பு முறையினை திரைசேரி தயாரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறைக்கமைய, எவ்வித அநீதியும் இன்றி அனைத்து தேர்தல் பிரிவுகளுக்கும் மாவட்டங்களுக்கும் தொழில்வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் பல்நிலை அபிவிருத்தி படையணியொன்றையும் உருவாக்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அவ்வவ்துறைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களில் இணைக்க எதிர்பார்த்க்க்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய1,30,000 இற்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் 6 மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். க.பொ.த சாதாரணதரம், எட்டாம் ஆண்டு சித்தி தகமையாக கொள்ளப்படும். இப்படையணியானது எதிர்வரும் ஜனவரி மாதம் அரச திணைக்களமாக நிறுவப்படும்.

அரச சேவைகளை மேற்கொள்ளல், பாடசாலைகளுக்கு உதவியளித்தல், வைத்தியசாலை செயற்பாடுகள், வனவிலங்குகளிலிருந்து கிராம மக்களை பாதுகாத்தல், பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் நிலைய செயற்பாடுகளுக்கு இவர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435