பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர்களின் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க போராட்டம் நடத்த இது உரிய தருணம் அல்ல என நாங்கள் கூறியபோது, போராட்டத்தைப் காட்டிக் கொடுப்பதாக எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதையடுத்து, நாங்ளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்.
ஆனால், நேற்றிரவு திடீரென் போராட்டத்தைக் கைவிடுவதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதனூடாக அவர் தொழிலாளர்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்துள்ளார் என பழனி திகாம்பரம் கூறியுள்ளார்.
இதேவேளை, தமது அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.