நீதித்துறைசார் அதிகாரிகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள 300 வீத வேதன உயர்வை அரசாங்கத்தில், அதற்கு சமாந்தரமாக பணியாற்றும் ஏனைய துறைசார் பணியார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.
நீதித்துறை அதிகாரிகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் சாரதி கொடுப்பனவு என்பனவற்றை ஏனைய அனைத்து நிறைவேற்றுத்துறையினருக்கும் வழங்க வேண்டும் என்றும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் ஒருநாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.