
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15,000 கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
பொது நிர்வாகம், உள்துறை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
கடந்த காலங்களில் தங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குமாறு கோரி நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியமையை ஆராய்ந்து இக்கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இக்கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.