அழுத்தங்கள் கொடுக்கும் வேலையில்லா பட்டதாரிகள்

இம்முறை வரவுச்செலவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பான திட்டமொன்றை வகுக்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் நேற்று (27) பாதயாத்திரையொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாதையாத்திரையானது நிதியமைச்சு வரையில் இடம்பெற்றதுடன் நிறைவில் பேச்சுவாரத்தையொன்றை நடத்துமாறும் கோரியிருந்தது. பாதயாத்திரையில் கலந்துகொண்ட ஒரு சிலருக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் கருத்து தெரிவிக்கையில், நிதியமைச்சரின் அந்தரங்க செயலாளர் துசித்த ஹல்லொலுவ மற்றும் மேலதிக செயலாளர் எச்.பி.சுமனசிஙக் ஆகியோருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு நிதியொதுக்குமாறும். நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்படுத்திக்கொடுக்குமாறும் தான் கோரிக்கைவிடுத்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது சுமார் 35,000 ஆசிரியர் வெற்றிடங்களும் 43,000 அபிவிருத்தி அதிகாரிகள் வெற்றிடங்களும் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமையினால் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் 5ம் திகதி முன்வைக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிடின் அடுத்த நாள் தொடக்கம் நாடு பூராவும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படும் என்றும் தேரர் எச்சரித்துள்ளார்.

மவ்பிம/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435