இலங்கைப் பொலிஸாரினால் ஆசிரியர்களினதும், அதிபர்களினதும் சுயவிபரங்களைச்சேகரித்து அச்சுறுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கல்வி அமைச்சின் பரிபாலனச் செயற்பாடுகளுக்கு உட்பட்ட நிறுவனங்களில் இருந்து அதற்கு வெளியே உள்ள இலங்கைப் பொலிஸ், பாடசாலைகளில் அதிபர்களின் ஊடாக அங்கு சேவைபுரிகின்ற ஆசிரியர்களின் சுயவிபரங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள், அரசியல் ஈடுபாடுகள் தொடர்பாக விசாரித்த்து அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகத் தினம்தோறும் ஈடுபட்டுவது பதிவாகின்றது.
இது தொடர்பாக ஆசிரியர் சேவைகள் சங்கம் கடுமையான எதிர்ப்பினையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துவதோடு இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இங்கு விசேடமாக தலைமைப் பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஆழுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் பலவகையான தகவலறியும் படிவங்களை அனுப்பி விபரங்களைக் கேட்டு அச்சப்பட வைக்கின்ற செயற்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, அவ்வாறான தகவல்களை வழங்க மறுக்கும் அதிபர்களுக்கு தொலைபேசியினூடாக அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இலங்கைப் பொலிஸாருக்கு ஆசிரியர்களினதும், அதிபர்களினதும் விபரங்கள் தேவையாயின், அது தொடர்பாகத் தகவலறியும் அமைச்சுஇ மாகாண அமைச்சுஇ திணைக்களங்கள்இ மற்றும் வலயக்கல்விக் காரியாலயம் உட்பட பல்வேறு நிறுவனங்களினூடாகத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இவ்வாறான தான்தோன்றித்தனமான தகவல் திரட்டும் படிவங்கள் மற்றும் தொலைபேசிகளினூடாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அழுத்தங்கள் என்பன மிகவும் கீழ்த்தரமான நோக்கத்தைக் கொண்டவையே தவிர வேறொன்றுமில்லை என்பது மிகத் தெளிவாகின்றது.
இந்த நாட்டுக்காக உழைக்கும் மக்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளுக்குள் தங்களுடைய தொழிலுரிமைக்காக தொழிற்சங்க உறுப்புரிமையைப் பெற்றுக் கொடுத்தல;, ஏற்பாடு செய்தல் தொழிற்றுறையில் இடையூறுகள் இன்றி இயங்குதல் தொடர்பாக அரசியல் யாப்பில் தொழிற்சங்க தகவல் சட்டத்தில் உரிய நிறுவனத்தினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இந்த நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் தங்களுக்கு விருப்பமான அரசியல் சார்புடையவராக இருப்பதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் வாக்களிப்பதற்கும் உள்ள உரிமை அடிப்படை உரிமை என்பது அரசியல் யாப்பு உறுப்புரையில் உறுதிப் படுத்தப்படுடுள்ளதனை புதியாகத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. அவ்வாறிருக்கையில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு ஊடாக இலங்கைப் பொலிஸ் செயற்படுவது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தேவையின் அடிப்படையில் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயமாகும்.
அதனால் இது தொடர்பாக உடனடியாகக் கவனம் செலுத்தி இலங்கைப் பொலிஸினாலோ அல்லது வேறு நிறுவனங்களினூடாகவோ ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஏற்படுகின்ற இவ்வாறான முறையற்ற அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது உங்களுடைய பொறுப்பு என்பதனை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.