நுண்கலை ஆசிரிய வெற்றிடங்ளை வர்த்தமானியை வெளியிட கோரிக்கை

வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களில் கலை மற்றும் நுண்கலைத் துறைப் பாடங்கள் உள்ளடக்கப்படவில்லை. அவற்றையும் வெற்றிடங்களில் உள்ளடக்குவதோடு அது பற்றி வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிடவேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தொழில்கோரும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்கோரும் பட்டதாரிகள் வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வனை அவரது அலுவலகத்தில் அண்மையில் சந்தித்தபோதே இது தொடர்பாக மனுவொன்றைக் கையளித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொழில்கோரும் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

‘நாங்கள் 130 இற்கும் அதிக நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். எமக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வடக்கு மாகாண கல்வி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடி எமது கோரிக்கை தொடர்பில் மனு ஒன்றை அவரிடம் கையளித்துள்ளோம்.

தற்போது வடக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் உட்பட 341 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அவற்றில் கலைத்துறை மற்றும் நுண்கலைப்பீட பாடங்கள் உள்ளடக்கப்படவில்லை. அவ்வாறு உள்ளடக்கப்படாத பாடங்ளைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. அதனால் பாடசாலைகளில் வெற்றிடங்கள் நிலவுகின்றன.

ஆகவே வடக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் கோரப்படாத நிலையில் எத்தனை பாடங்கள் உள்ளன? அவை தொடர்பில் ஆராய்ந்து அந்த வெற்றிடங்களுக்கும் விண்ணப்பங்களைக் கோரவேண்டும்.

அது தொடர்பான அறிவிப்பை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியுள்ளதாக வட மாகாணத்தில் தொழில்கோரும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435