ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று (27) முதல் சட்டப்படி பணியில் ஈடுபடுகின்றன.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று (27) முதல் சட்டப்படி பணியில் ஈடுபடுகின்றன.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் சேவையை, தொழில்முறை சேவையாக மாற்றுதல், இடைக்கால சம்பள சுற்றறிக்கை வழங்குதல், கல்விக்கு 6 சதவீத ஒதுக்கீடு, பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடமிருந்து பணம் சேகரிப்பதைத் தவிர்த்தல், 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் சேவையில் இணைந்த ஆசிரியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும் அவர்களின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலையில் ஈடுபடுவதற்கு இன்று முதல் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .
இதற்கமைய காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான பாடசாலை நேரத்தில் கற்றல் நடவடிக்கைகள் தவிர்ந்த வேறு எந்த பணியிலும் ஈடுபடாதிருக்க அவர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக வகுப்புக்களை நடத்துதல், திணைக்கள பணிகள் உள்ளிட்ட வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.