ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கு இதுவரை 6 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த கொடுப்பனவு தமது வாழ்வாதாரத்துக்கு போதாது என குறித்து ஆசிரிய உதவியாளர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். தோட்டபுறங்களில், தூரப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து செலவை முகாமைத்துவம் செய்வதற்குகூட இந்தக் கொடுப்பனவு போதாதுள்ளதாக ஆசிரியர் உதவியாளர்கள் சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இணைத் தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகிNயுhர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போதே பிரதமரிடம் விடுத்து கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இதுவரைக்காலமும் 6 ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படவுள்ளது. இந்தக் கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.