வேலையற்ற பட்டதாரிகளை கவனிக்குமா அரசாங்கம்?

பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 13ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்ததும் வழமைப்போலவே கண்ணீர் புகை, தண்ணீர் தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கலைத்ததும் அனைவரும் அறிந்த விடயமே. அரச தொழில் வாய்ப்பை கோரி பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம் நடத்துவதும் அவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதும் மிகச்சாதாரண விடயமாக தற்போது மாறியுள்ளது. வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தபோதிலும் அவர்களுக்கு சரியான பதிலை வழங்க அரசாங்கம் தவறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக உறுதிக்கூறியே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் அவ்விலக்கை நல்லாட்சியினால் அடைய முடியாது போயிற்று. இன்று நல்லாட்சியும் இல்லை. அதனால் போராட்டத்தை மேற்கொள்ளும் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்றபோதிலும் இதுவரையில் கண்ணீர் புகைத்தாக்குதல், தண்ணீர் தாக்குதல் என்பனவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வாகும். நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்லும் சந்தர்ப்பங்களில் தடியடித்தாக்குதலும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தாக்குதல்களுக்குள்ளான பட்டதாரிகள் கைகால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு. இது மிகவும் பிரச்சினைக்குரிய விடயமாகும்.

பட்டதாரிகள் நாட்டின் வளமாக பயன்படுத்தப்பட ​வேண்டும். எனினும் பட்டதாரிகளை அரசாங்கத்திற்கு விரோதமானவர்களாக பார்க்கும் அவல நிலையே காணப்படுகிறது. அபிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அரசாங்கம் நேர்முகத்தேர்வை நடத்தியிருந்தது. அத்தரவுகளுக்கமைய 56375 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று அடையாளங்காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2018 – 2019 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் இருந்து வௌியேறிய பல பட்டதாரிகளும் வேலையற்ற பட்டதாரிகள் கூட்டத்தில் இணைந்துள்ளனர். இதனால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 35000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வெகுவிரையில் இவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவார்களாயின் பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்கும் இது சிறந்த தீர்வாகும் என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது..

நாட்டில் பட்டதாரிகளை உருவாக்க அரசாங்கம் பெருந்தொகையான நிதியை செலவிட்டபோதிலும் அப்பட்டதாரிகளின் எதிர்கால பயணத்திற்கான சிறந்த பாதை அமைக்கப்படாமை பிரச்சினைக்குரிய நிலையாகும். தற்போது நாட்டில் நிலவும் தொழிற்சந்தையை கவனத்திற்கொண்டு பல்கலைக்கழக கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இது தொடர்பில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் தேசிய கொள்கையொன்றை உருவாக்கவில்லை. தொடர்ந்து தொழில் கேட்டு போராட்டம் செய்பவர்களாக அல்லாது நாட்டில் தொழில் வாய்ப்பை உருவாக்கும் முதலீட்டாளர்களாக பட்டதாரிகளை மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் இப்பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதனால் அடிக்கடி மாறும் அரசாங்கத்தினால் மாற்ற முடியாத வகையிலான திட்டமொன்றை வகுப்பது மிகவும் அவசியமாகும். குறைந்த வட்டியுடனான கடன் வழங்கல் உட்பட ஏனைய அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

நாட்டின் சுமையாக பார்க்காது செயற்றிறன் மிக்கவர்களாக பட்டதாரிகளை மாற்றினால் வீழ்ச்சியடைந்துள்ள எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் அதற்கு உறுதியான இலக்குடன் கூடிய திட்டமிடலொன்று அவசியம். பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் நேர்மறையாக நோக்குவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதவரையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.

வேலையற்ற பட்டதாரிகள் கொழும்புக்கு விஜயம் செய்து எதிர்ப்புத் தெரிவிப்பதும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாக்குதல் மேற்கொள்வதும் மிகச் சாதாரண விடயமாக இருந்தபோதிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்பதற்கு நாம் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியம்

நன்றி- திவயின
வேலையத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435