ஆசிரியர் நியமனத்திற்கு தடைகோரி வழக்குத் தாக்கல்

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு இடைகால தடைகோரி ஐதேக மாகாணசபை உறுப்பினர் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

வட மத்திய மாகாண ஐதேக உறுப்பினரான கஸ்தூரி அநுராத, சட்டத்தரணி தினேஸ் டி சில்வா ஊடாக இவ்வழக்கை தொடர்ந்துள்ளார். கடந்த 28ம் திகதி இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், பொதுச்சேவை ஆணைக்குழு, ஆளுநர், வட மத்திய மாகாண பிரதான செயலாளர், முதலமைச்சர், மாகாண கல்விப் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் 1610 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்னவின் ஆலோசனைக்கமைய புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதனை தடை செய்வதற்கே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வட மத்திய மாகாண முதலமைச்சர், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறான இடைக்கால தடை கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் வறிய பிள்ளைகளுடைய கல்வியுரிமையை பாதுகாப்பதற்கே நாம் முயற்சி செய்கிறோம். தமக்கு வாக்குகளை வழங்கிய மக்கள் பிரதிநிதியொருவர் வாக்காளர்களுக்கு எதிராக, அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது இதுவே முதற்தடவை. பொதுசேவை ஆணைக்குழுவின் ஆய்வின் பின்னர் இந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சவாலுக்கு முகங்கொடுக்க நாம் தயாராயுள்ளோம்.

வட மத்திய மாகாணத்தில் அனுமதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 16,830 ஆகும். எனினும் தற்போது 15,934 மட்டுமே சேவையில் உள்ளனர். அதில் பதில் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் உட்பட 750 பேர் ஆசிரியர் சேவையில் இருந்துகொண்டே சேவையாற்றுகின்றனர். எனவேதான் இந்த நியமனங்களை வழங்க நாம் தீர்மானித்தோம். பிள்ளைகளுக்கு கல்வி கற்பதை தடை செய்ய ஐதேக விரும்பினால் அதன் பொறுப்பை வாக்களித்த மக்கள் ஏற்றுக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

நன்றி- மவ்பிம/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435