தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி டிப்ளோமாவை பூர்த்தி செய்த 4,286 பேருக்கு அடுத்த மாதம் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
2015/2017 கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி இம்மாதம் முதலாம் திகதி வௌியான பெறுபேறுகளுக்கமைய இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் நியமனம் வழங்குமாறு கல்வியமைச்சர், சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய பாடசாலைகளில் சுமார் 3, 748 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் ஏனையோருக்கு மாகாண பாடசாலைகளில் நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.