இவ்வருட இறுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நடைபெற்ற பாடசாலையொன்றில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று (10) நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
உயர் டிப்ளோமாதாரிகள் மாத்திரமன்றி, பட்டதாரிகள், க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்தோர் என அனைவரையும் சேவையில் இணைத்து ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதுடன் எதிர்காலத்திலும் கல்வி உயர்வடைதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்றும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்