2020 இல் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் இணைக்கப்படவுள்ளனர்

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றது.

அதில் உரையாற்றிய அமைச்சர்,

நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: news.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435