கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் கல்வித்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் ஆளணி கணக்கெடுப்பின் படி கிழக்கு மாகாணத்தில் 328 தமிழ் மொழில மூல கணித ஆசிரியர் வெற்றிடங்களும் 106 சிங்கள மொழி மூல கணித ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
இதேபோல் 149 தமிழ் மொழி மூல விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களும் 73 சிங்கள மொழி மூல விஞ்ஞான ஆசிரியரியர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 346 ஆங்கில மொழிக்கான ஆசிரியர் வெற்றிடங்களும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் 132 ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
இவ்வாண்டுக்கான கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்படுமாயின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று நினைப்பதாக முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்