ஆசிரிய உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்றுநிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைத்க்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில்ஹெட்டிஆராச்சி கையொப்பமிட்ட சுற்றுநிரூபங்கள் அனைத்து மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் முதல் நிலுவையுடன் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக 6 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. தமக்கு வழங்கப்படும் இந்தக் கொடுப்பனவு போதாது என சேவையில் ஈடுபடும் ஆசிரிய உதவியாளர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, கடமையில்; ஈடுபட்டு;ள்ள ஆசிரிய உதவியாளாகளுக்கான கொடுப்பனவை 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க கல்வி அமைச்சால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இந்த நிலையில், அதிகரிக்கப்பட்ட 4 ஆயிரம் கொடுப்பனவுக்கு அமைய ஆசிரிய உதவியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவை மாதாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கான சுற்றுநிரூபம் இன்று மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைத்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கொடுப்பனவை கடந்த பெப்ரவரிமாதம் முதல் நிலுவையுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.