ரயில் திணைக்கள பணியாளர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று குறித்த, நேற்று முன்தினம் இடம்பெற்றற அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் சரத் அமனுகமவினால் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆதரவளித்த போதும், அதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யோசனையானது, அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் ஆய்வின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டது.
எனினும் ரயில் திணைக்கள பணியாளர்களுக்கான சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்டால், ஏனையத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அமைச்சர் மங்கள குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.