தோட்டப் பாடசாலைகள் மற்றும் நாட்டில் வேறு பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவை பத்தாயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தோட்டப்பாடசாலைகள் மற்றும் நாட்டில் வேறு பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த 6ஆயிரம் ரூபா கொடுப்பனவை 10ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் கோரப்பட்ட வேண்டுகோளின் பயனாகவே கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஆசிரியர் உதவியாளர்களின் கோரிக்கை மற்றும் நிலவும் வாழ்க்கைச்செலவை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் பிரகாரம் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2017 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி