ஆசிரிய உதவியாளர்களுக்கோர் செய்தி

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்கள் 215 பேரை ஆசிரியர் சேவை 3 – I க்கு உள்வாங்கல் மற்றும் நியனம் வழங்கல் நிகழ்வு நாளை (4) பள்ளேகல மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

ஆயினும் 1000 க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் கூட மிக குறைந்த எண்ணிக்கையான ஆசிரியர் உதவியாளர்களே ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இக்ேகள்வி பலர் மனதில் உள்ளது, எனவே இது தொடர்பில் மாகாண ஆளுனரிடமும், மாகாண கல்வி செயலாளரிடமும் வினவியபோது பின்வரும் காரணங்கள் சொல்லப்பட்டன.

1.215 பேர்களின் கோப்புகளே பூரணப்படுத்தப்பட்டுள்ளன.
2. வலய கல்வி காரியாலயங்களில் இருந்து கோப்புகள் கிடைக்கவில்லை.
3. நான்காம் திகதிக்குள் கோப்புகள் பூரணப்படுத்தப்பட்டால் அவர்களுக்கும் அன்றைய தினமே நியமனம் வழங்கப்படும்
4 . இது ஒரே நாளில் முடிவுறும் செயற்பாடல்ல. உத்தியோகபூர்வமான ஒரு தொடக்கமே. பயிற்சியினை முடித்து பெறுபேருகள் உறுதி செய்யப்பட்டு வலய கல்வி பணிமனையினூடாக அனுப்பபடும் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் தரம் 3 – I க்கு உள்வாங்கப்படுவர்.

இது அவர்கள் எமக்களித்த உறுதி மொழி. இந்தியமனம் எல்லோருக்கும் உடனடியாக கிடைக்கப் பெறாமைக்கு முக்கிய காரணங்கள் மூன்று.

1. நாம் பல முறை கூறியும் சிலர்பயிற்சி சான்றிதழ்களை வலயங்களில் ஒப்படைக்காமை.
2. வலயங்களின் மெத்தனம்.
3. பரீட்சை திணைக்களம் உறுதி படுத்தி அனுப்புவதில் காட்டிய தாமதம் / மெத்தனம்.

இனியும் காலம் தாழ்த்தாது உங்கள் வலயங்களில் சென்று உங்கள் கோப்புகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பாருங்கள். இதில் ஏதும் நீங்கள் இடர்படுவீர்களாயின் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

சி.இரவிந்திரன்.
பொதுச்செயலாளர்

மலையக ஆசிரியர் முன்னணி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435