பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவவேண்டும். அல்லது அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையாவது கொடுக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் (18) பாராளுமன்றில் தெரிவித்தார்.
ஆசிரிய உதவியாளர்களாக இணைக்கப்பட்டவர்கள் தற்போது ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளமான 6000 ரூபாவில் மாதாந்த செலவை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சியாளர்களாக இணைக்கப்பட்டவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றோர் பிள்ளைகளின் செலவுக்காக பணம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்..
இது தொடர்பில் நான் பலதடவை மன்றில் அறிவித்துள்ளேன். கல்வியமைச்சரும் பல தடவை கதைத்துள்ளேன். எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தினால் ஆசிரியர் உதவியாளர்களுடைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.