இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்மாத இறுதியில் இருந்த சம்பளம் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த ஆடைத்தொழிற்சாலை அமைப்பின் தலைவர் தலைவர் எ. சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான கம்பனிகள் மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை வழங்கியுள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதிலேயே சிக்கல் தோன்றியுள்ளது என அவர் சன்டே மோர்னிங் பிஸ்னஸ் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
வௌிநாடுகளிலேயே எமது உற்பத்திகளுக்கு அதிக கேள்வியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அந்நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையினால் இந்நிலை தோன்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.