ஆடை தொடர்பில் வௌியான சுற்றுநிரூபத்தில் மாற்றம் இல்லையாம்?

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் வௌியான சுற்றுநிரூபத்தில் மாற்றங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று அரச நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறித்த அமைச்சின் தகவல் வழங்கக்கூடிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரச ஊழியர்களும் குறித்த சுற்றுநிரூபத்திற்கு கட்டுப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 17ம் திகதி குறித்த சுற்றுநிரூப திருத்தங்கள் தொடர்பில் அரச நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வௌியாகியிருந்தது. எனினும் அவ்வாறான கலந்துரையாடல் ஒன்று நடக்கவில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது.

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்கள் தேசிய உடை அல்லது நீளக்காற்சட்டை மற்றும் மேற்சட்டை, பெண்கள் சேலை அல்லது ஒசரிச்சேலையும் முகத்தை மறைக்காது தமது கடமைகளை முன்னெடுக்கவேண்டும் என்று அச்சுற்றிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத தெரண/வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435