ஆடை தொழிற்சாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களிடையே வைரஸ் தொற்று பரவாதிருக்கும் வகையில், தொழிற்சாலை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதிக்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று (18) முதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
நிறுவனங்களில் பரிசோதனைக்காக வருகைதரும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, நிறுவன தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்போது, சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மூலம் : Newsfirst.lk