தொழில்வழங்குநர்களுக்கு சாதகமாகவும் தொழில் செய்வோரை சுரண்டலுக்குள்ளாக்கும் வகையில் தொழிற் சட்டங்களை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி நடைமுறைப்படுத்தப்படுமாயின் தொழில் வர்க்கத்தினரது உரிமைகள் பல இல்லாதொழியும் என்று அச்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கத்தின் திட்டத்தை தோற்கடிக்கப்படும் என்றும் இது தொடர்பில் மக்களுக்கு தௌிவுபடுத்தும் வகையில் 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்கள் நாடு முழுவதும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது