5 இலட்சத்திற்கும் அதிகளவான பணியாளர்கள் பணியாற்றிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நூறு ஆடை தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தமது ஊழியர்களுக்கு இந்த மாத வேதனத்தை வழங்க முடியாது என தொழில் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை உள்ளடக்கிய ஒன்றிணைந்த ஆடை சங்கத்தின் செயலாளர் எம்.பி.டி.குரே இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் இதே மாதத்தில் ஆடை உற்பத்தி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளை விநியோகிக்குமாறு யுனிசெப் நிறுவனம் அண்மையில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவின் தலைமையிலான கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக்கு அறிவித்திருந்தது.
எனினும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடை சங்கத்தின் செயலாளர் எம்.பி.டி.குரே தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு இதுபோன்ற பாதுகாப்பு முகக்கவசங்கள் 15 லட்சம் அளவில் விநியோகிக்குமாறு யுனிசெப் நிறுவனம் கோரியிருந்தமை குறிப்பித்தக்கது.