இலங்கையில் ஆண்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் மற்றும் எச்.ஐ.வி.எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் கடந்த 7 மாத காலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பையடுத்து இவ்விடயம் தெரியவந்துள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டின் முதல் 7 மாதக்காலப்பகுதியில் மட்டும் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 153 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை நூற்றுக்கு 25 வீதத்தால் அதிகரித்துள்ளது என்றும் பாதுகாப்பற்ற பாலியல் உறவு மற்றும் ஒருபாலினச் சேர்க்கை என்பனவே எச்.ஐ.வி தொற்று ஏற்பட பிரதான காரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெரும்பாலான பெண்களுக்கு அவர்களுடைய கணவன் அல்லது காதலனிடமிருந்து எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்