ஆயிரம் மொழி அலுவலர்களுக்கு ஜனவரியில் நியமனம்

எதிர்வரும் ஜனவரி மாதம் ஆயிரம் மொழி அலுவலர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் தீவிர முயற்சியின் பயனாக ஆயிரம் மொழி அலுவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அரச நிறுவனங்களில் தமிழ் மொழியை சீராக நடைமுறைப்படுத்தும் வகையில் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரணதரத்தில் தாய்மொழியில் திறமை சித்தியும் ஆங்கிலம், கணிதம் ஆகிய மொழிகளில் சாதாரண சித்தியும் பெற்றிருப்பதுடன் உயர்தரத்தில் ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைக்கப்பட்டு ஆறுமாத பயிற்சியின் பின்னர் நிரந்தர நியமனத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர். தற்போது இலங்கையில் உள்ள 21 அரச நிறுவனங்களில் சுமார் 3300 மொழி அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435