ஒப்போ நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

சீனாவில் இருந்து கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்யும் OPPO லங்கா தனியார் நிறுவனத்தின் வேகமான வளர்ச்சிக்கு பிற்புலமாக இறந்த இலங்கை ஊழியர்கள் அண்மைக்காலமாக பல்வேறு உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை தொடர்பில் தொழிலாளர் திணைக்களத்திற்கு ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் முறைபாடு செய்திருந்தமை தொடர்பில் அண்மையில் செய்தி வௌியிட்டிருந்தோம்.

அம்முறைப்பாட்டுக்கமைய, பொறுப்புக்கூறும் அதிகாரிகளை உடனடி விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்த போதும் அவர்கள் உரிய தினத்தில் விசாரணைக்கு வரத்தவறியமை காரணமாக மீண்டும் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி விசாரணைக்கு வருமாறும் சட்டவிரோதமான உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்துமாறும் தொழிலாளர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கை ஊழியர்கள் சீன அதிகாரிகளினால் மிக பின்தங்கிய பிரதேசங்களுக்கு மாற்றல் செய்யப்படுவதுடன் பதவி நிலையிலிருந்து கீழிறக்குவதாகவும் சம்பளத்தை சட்டவிரோதமான முறையில் குறைப்பதாகவும் சட்டரீதியான விடுமுறைகளை சட்டவிரோதமாக இல்லாமல் செய்வதாகவும் அவ்வூழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறைபாடு செய்த பின்னரும் கூட அவர்களின் செயற்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் ஊழியர்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பண்டிகைக் காலத்தில் தேசிய ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை கவனத்திற்கொண்ட ஒப்போ தொழிற்சங்க செயலாளர் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு ஊழியர் உரிமையை பாதுகாக்கவேண்டும் என்றும் சட்டத்தை மதிக்குமாறும் கடிதம் அனுப்பியுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் தொழில் ஆணையாளர் மற்றும் கைத்தொழில் தொடர்பு ஆணையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த நிறுவனத்தில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் Protect தொழிற்சங்கத்தினூடாக ஒப்போ நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435