
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி ஜனவரி 23 மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளைய தினம் சிவில் சமூக அமைப்புக்களால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்தப்பவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாயாக்கு என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு, ஹட்டன், ஹப்புத்தளை, பசறை, பதுளை, கேகாலை, மத்துகமை, காலி, மாத்தளை, கண்டி, தெல்தோட்டை, இரத்தோட்டை, நுவரெலியா, ராகலை, தலவாக்கலை, யாழ்ப்பாணம், வவுனியா, பொகவந்தலாவை, இரத்தினபுரி, ருஹுணு ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களுக்கு முன்னால் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.