தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவது சாத்தியமில்லை. நாள் சம்பளமாக 730 ரூபா சம்பளம் வழங்குவது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ளாமல் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி நாட்டில் பல பாகங்களில் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். போராட்டங்களை கைவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகச் சந்தையில் தேயிலை, றப்பர என்பவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பு சாத்தியமற்றது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், சம்பள அதிகரிப்பின் அவசியத்தினை உணர்ந்து 730 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைநாட்கள் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. எதிர்வரும் தினங்களில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் சம்பளம் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்களுக்கு இலாபம் இருக்க வேண்டும். இச்சம்பளம் அரசாங்கம் வழங்குவது அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
வேலைத்தளம்/ பிபிஸி