ஆயுர்வேத கூட்டுத்தாபன 5 மாத வேலைநிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி

கடந்த 5 மாதங்களாக ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நேற்று (28) இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்த போராட்டம் நிறைவுக்கு வந்தது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டுத்தாபனத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடிய அமைச்சரிடம், கூட்டுத்தாபன தலைவர் லால் சமரசிங்க தனது பணியை தொடர்வதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாக தொழிற்சங்க உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு உதவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இக்கலந்துரையாடலில் ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் சகல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435