தொழிலாளர் தின மாற்றம் – சர்வதேச தொழிலாளர் அமைப்பில் முறைப்பாடு

சர்வதேச தொழிலளார் தினக் கொண்டாட்ட தினம் மாற்றப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தை மே மாதம் 7ஆம் திகதி கொண்டாடுமாறு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் 29ஆம், 30ஆம் திகதிகளில் விசாகப் பூரணை தினக் கொண்டாட்டம் இடம்பெறுவதால், அந்த வாரத்தில் சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என பௌத்த மகாசங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிடுகிறார்.

சர்வதேச தொழிலாளர் தினம் மே மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தொழிலாளர் தினத்தை பிறிதொரு தினத்தில் கொண்டாட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தவறானதாகும். இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டம் மாற்றப்பட்டமை குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435