ஆரம்ப ஆங்கில, உடற்பயிற்சி ஆசிரியர் நியமனம்

வட மாகாண தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளில் ஆரம்ப ஆங்கில கல்வி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை (31)  காலை 10.00 மணிக்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வழங்கப்படவுள்ள இந்நியமனம் வழங்கலினூடாக இலங்கை ஆசிரியர் ​சேவையின் 3ஆம் வகுப்பு 1 (இ) சேவைக்கு டிப்ளோமாதாரிகள் ஆரம்ப ஆங்கில கல்வி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இம்மாதம் 5ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வு மற்றும் செயன்முறையினூடாக இவ்டிப்ளோமாதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்டு கடிதம் கிடைத்த டிப்ளோமாதாரிகள் இம்மாதம் 31ம் திகதி காலை 9.00 மணிக்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களுடன் (ஆள் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு) சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். பெண்கள் இள வர்ண சேலையும் ஆண்கள் நீல நிற காற்சட்டை, வௌ்ளை நிற சேர்ட் மற்றும் டை அணிந்து சமூகமளிக்குமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435