ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தண்ணீ்ர்தாரை பிரயோகம்

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடைக்கால கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமை மற்றும் ஓய்வூதியத்தை இல்லாதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றமை முதலானவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த போராட்டத்தைக் கலைப்பதற்கு காவல்துறையினர் தண்ணீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க, தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தண்ணீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார.

இந்த நிலையில், இதுபோன்ற தாக்குதல்களினால் தமது போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435