கொடுப்பனவு இல்லையேல்… – எச்சரிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்

இந்த ஆண்டுக்கான வரவுசெலவில் குறிப்பிட்டது போன்று இடைக்கால கொடுப்பனவு 2500 ரூபாவை இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்பட்டாத நிலையிலேயே அச்சங்கம் போக்குவரத்துத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு கடிதம் மூலம் மேற்கூறியவாறு அறிவித்துள்ளது.

இம்மாதம் ஜூலை மாதம் தொடக்கம் வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்ட இடைக்கால கொடுப்பனவு ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. ரயில் திணைக்கள ஊழியர்கள் உட்பட பலருக்கு இத்தொகை அவர்களுடைய சம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பல அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலகட்டங்களில் முகங்கொடுக்க நேர்ந்த பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்கள் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் தமது கடமைகளை மிகவும் ஊக்கத்துடன் முன்னெடுத்தனர் எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளினூடாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போயுள்ளது என்று அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளனர்.

குறித்த 2500 ரூபா கொடுப்பனவானது இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று முகாமைத்துவ சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 17.06.2019 என திகதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் மூலம் எமக்கு தெரியவந்துள்ளது.

எனவே இந்நிலை தொடர்பில் ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்று தருமாறும் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாத போனால் உறுதியாக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435