ஆளணி பற்றாக்குறையால் தடுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை

வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாளர்களை இணைத்துக்கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் தற்போது ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வீதி அபிவிருத்தி சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழிலாளர் நிர்வாகம் உட்பட பல துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக விடயப்பொறுப்பு அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள சங்கத்தின் பிரதான செயலாளர் பி.எம்.கேடீ. பண்டாரவின் கையெழுதுடன் கூடிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்கள் எவ்வாறிருப்பினும் நிகழ்காலத்தில் செயற்பாடுகள் முறையாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து நீக்கி சபையை முடக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது வீதி பராமரிப்புப் பணிகள், மகநெகும நிறுவனத்தினூடாக வெளிநிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களை இணைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு வீதி பராமரிப்புப் பணிகள் ஏனைய நிறுவனங்களுக்கு பொறுப்பளிக்கும் பட்சத்தில் மக்களின் போக்குவரத்து இலகு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் எம்மால் பொறுப்பெடுக்க முடியாது. கடந்த காலங்களில் அதிகாரசபை வழங்கிய சேவைகள் தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்குவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தயாராயுள்ளது. மக்களின் பாதுகாப்பு மற்றும் இலகுத்தன்மைக்கேற்ப தரத்துடன் கூடிய வீதிகளை நிர்மாணிக்க வீதி அதிகாரசபை பொறுப்புடன் செயற்பட விடய பொறுப்பு அமைச்சர் வழி வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435