
முறையற்ற இடமாற்றத்தைக் கண்டித்தும் தங்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றுகாலை (29) இவ்வார்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து கஷ்டப் பிரதேசங்களுக்கு கடந்த மே மாதம் இடமாற்றம் வழங்கப்பட்ட 38 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கஷ்டப் பிரதேசங்களில் கற்பித்தல் செயற்பாடுகளை 05 வருடகாலம் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கும் மீண்டும் கஷ்டபிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வேலைத்தளம்/உதயன்