இணையவழி கற்பித்தலுக்கு அழைக்கும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளால் கல்வியைத் தொடரமுடியாதுள்ள தமிழ் மொழிமூல மாணவர்களுக்காக இணையவழியூடாகவும், தொலைக்காட்சியூடாகவும் கற்பித்தலை மேற்கொள்ள ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தொடர்புகொள்ளுங்கள் என இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதைவிட கற்பித்தலை வீட்டில் இருந்து மேற்கொள்ள விருப்பமானவர்கள் குறுகிய நேர ஒளிப்பதிவு செய்து அதனை [email protected] எனும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி தமக்கு அனுப்பி வைக்குமாறும் , அவர்களுடைய கல்வி ஆலோசனைக்குழு அதனை பரிசீலனை செய்து மாணவர்களுக்கு வழங்கும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
.
மேலும், ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தமது முகநூலுக்கூடாகவும் மின்னஞ்சலுக்கூடாகவும் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், (Viber, WhatsApp) கற்பிக்கும் வகுப்பு, பாடம், அலகு என்பவற்றை முன்கூட்டியே அறியத்தருமாறும் தமிழ் மொழி மூல மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சங்கம் தனது முகநூலூடாக ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435