இது நாம் அவதானத்துடன் செயற்படவேண்டிய தருணம் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் கொவிட் 19 தொற்றுள்ளவர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர். இது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சஙகத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். இதுவரை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை அண்மித்த பகுதிகளில் 135 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடி வருகிறோம். திவுலபிட்டிய மற்றும் மினுவங்கொட பிரதேசத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இப்பிரதேசங்களில் இன்னும் தொற்றாளர்கள் உள்ளனர். அவர்கள் நாள்தோறும் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நிறுவன கோவை மற்றும் ஒழுக்கக்கோவை என்பவற்றை அடிப்படையாக கொண்டு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொவிட் 19 நிலைமை குறித்து ஊடகங்களுக்கு வழங்கி வருவதை தவிர்க்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் குறித்து கருத்து தெரிவித்த அவர், எந்த சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்களின் கருத்து சுதந்திரத்தை தடை செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவல் நிலைமையை அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டாம் என்றும் துறைகளுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்க பயன்படுத்த வேணடாம் என்றும் தான் உரிய தரப்பினரிடம் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435